முல்லைத்தீவு மாங்குளம் நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜீவகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புக்கு இலக்கணமாய்
அரவணைத்து வாழ்ந்தீர்கள்!
பண்பின் சிகரமாய்
பணிவாக வாழ்ந்தீர்கள்!
பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் சின்னத்துரை ஜீவகுமார் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை 01-10-2025 புதன்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியகிரியைகள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
There is always a place for a few that no one can fill..! No matter how long it takes, some actions will always remind you of him. You will forever alive in memories & our heart jeevan mama