திதி: 14-08-2026
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குட்சைட் றோட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டு திவசக் கிரியைகள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
குட்சைட் றோட், கோண்டாவில்.