யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் குட்சைட் றோட்டை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
எம் மனங்களில் வாழுதையா...!!
தன்னுடைய கடமைகளை கவனமாக
செய்து
முடித்து
தனியாக இப்போது எம்மை
விட்டு போய்விட்டார்
நாட்கள் முப்பத்தொன்று அல்ல
ஆயிரந்தான் சென்றாலும்
உங்கள் தோற்றமும்
உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை
நெஞ்சில்
நிறைந்து இருக்கும்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 23-08-2025 சனிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும்,வீட்டுக்கிருத்திய கிரியைகள் 25-08-2025 திங்கட்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன் நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
குட்சைட் றோட்,
கோண்டாவில்.