யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா என்பதற்கு உலகிலே
வரைவிளக்கணமாய் இருந்து விட்டு...
உன்னை உருக்கி “எங்களை”
வாழவைத்து விட்டு...
உன்னை அழித்து “எங்களை”
செதுக்கி வைத்து விட்டு...
உன் முத்துக்களை கைவிட்ட சிப்பியை போல
எங்கே நீ மறைந்தாய் அம்மா...
அன்பிற்கும் அறவணைப்பிற்கும் பரிசாக எங்கள் கண்ணீரை
காணிக்கையாக கொடுக்க சொல்லிவிட்டு...
கண்ணீர் வடிவதை துடைப்பதற்கு மட்டுமே
எங்கள் கைகளை வைத்து விட்டாயே அம்மா...
உன்னை நினைக்கும் போது நெஞ்சம் “குமுருகிறது”
நினைக்காமல் இருக்கவும் நிமிஷம் கடக்கவில்லை
ஏனோ எங்களுக்கு இந்த வேதனையும், சோதனையும் அம்மா...
என்றாலும் நீ எங்களுக்குள் இருக்கின்றாய்...
என்றென்னும் போது மனம் மகிழ்கிறது...
அம்மாவின் மரணச் சம்பவத்தில் ஆறா துயரத்தில் இருந்த வேளையில் எங்களுக்கு உதவி செய்தவர்களுக்கும், ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்களுக்கும், தொலைபேசி, சமூகவலைதளங்கள் மூலமாக உள்நாடு, வெளிநாட்டிலிருந்தும் துயர் பகிர்ந்த உள்ளங்களுக்கும், மாலைகள், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செய்தோர்களுக்கும் மற்றும் இறுதி நிகழ்வின் மண்டபத்திற்கு வந்து துயர் துடைத்த எல்லா அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனம் மார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய என்றென்றும் பிராத்திப்போமாக....