யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைவசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
நல்வழிகாட்டி எங்களை வளர்த்தெடுத்த
எமதருமை ஐயாவே..!
ஆண்டுகள் இருபது முடிந்தாலும்
எங்கள் இதயங்களிலிருந்து அகலாது
உங்கள் நினைவுகள்..!
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
ஈடிணையில்லா இன்பம் தந்து எங்களை
வளர்த்தெடுத்த பெருமைக்குரிய ஐயாவே..!
உண்மை, நேர்மை சொல்லி வளர்த்து எங்கள்
உயிரினில் கலந்துவிட்ட எங்கள் ஐயாவே..!
எங்கள் உயிரினில் கலந்துவிட்ட எங்கள் ஐயாவே..!
ஊரிலுள்ள அனைவரையும் ஒற்றுமையாய்
அரவணைத்துச் சென்ற உத்தமராசாவே..!
என்றென்றும் எங்கள் நல்வாழ்விற்கு
நல்வழி காட்டிய எங்கள் குலதெய்வமே..!
ஏழைகள், ஏதிலிகள் எது கேட்டாலும் இல்லையென்று
சொல்லாமல் இரக்கம் காட்டிய எங்கள் எஜமானே..!
சொல்லாமல் இரக்கம் காட்டிய எங்கள் எஜமானே..!
ஐவரைப் பெற்றெடுத்து அன்புடன் வளர்த்த
எங்கள் அன்புத் தெய்வமே..!
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”
என்பதனை உணர்வோடும் ஒற்றுமையாய்
வாழவேண்டுமென்றும் சொல்லி வளர்த்த
எங்கள் பிதாவே..!
ஓரிரு வார்த்தை சொன்னாலும்
உண்மையாய் வாழ்ந்து காட்டிய எங்கள்
இல்லத்தின் இதயமே..!
ஒளவியம்(மூலிகை வைத்தியம்) செய்து, செய்த
அயலவர்கள் இன்றும் இருக்கின்றார்கள் ஊரினிலே
உங்களின் நினைவுகளோடு..!
இவையனைத்தும் என்றில்லை இன்னும்
ஏராளம் இருக்கின்றது இதயத்தினுள்ளே
இனிமையாய் வாழ்கின்றோம் இன்பமாய்
இவ்வுலகில் உங்கள் நினைவுகளோடு நாம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!