யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, London பிரித்தானியா, பிரான்ஸ், நல்லூர் செட்டித்தெரு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் ஆலயமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
சீராட்டும் தந்தையாய்
அழியாத கோலமாய் என்றும்
எங்கள் உணர்வில் கலந்த
நினைவாய் நீங்கள்
வாழ்ந்த நாட்களை என்றும்
வசந்தமாய் தந்தவரே
காலங்கள் கடந்து பிரிந்தாலும்
இங்கே நீங்கள் இல்லை என
ஊர் சொன்னது ஆனால்
முப்பொழுதும் உங்கள் கற்பனையில்
எங்கள் இதயம் துடிக்கிறது
உதடுகள் மட்டும் சிரிக்க
உள்ளங்கள் அழுகிறது
என்றும் எப்பொழுதும் உங்கள் நினைவில்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 09-03-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியை 11-03-2026 புதன்கிழமை அன்று முப 08:00 மணியளவில் அவர்களின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். நன்றி
முகவரி:
72, செட்டித்தெரு,
நல்லூர்.
Live link : Click here
அன்போடும் , நற்பண்போடும் வாழ்ந்து எம்மை எல்லாம் அரவணைத்து புன்னகையோடு அளவளாவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் என கூடி குலாவி இருந்த எங்கள் மாமா இன்று உங்களை இழந்து தவிக்கின்றேன் . அருகிருந்து...