2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி சிவபாதம்
வயது 73
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிவபாதம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-05-2026
ஆண்டு இரண்டு கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை !
ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்