Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 OCT 1950
மறைவு 22 JUN 2025
அமரர் சின்னத்தம்பி ரகுலேந்திரன்
ஓய்வுபெற்ற சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்- உள்ளூராட்சி திணைக்களம் வடமாகாணம்
வயது 74
அமரர் சின்னத்தம்பி ரகுலேந்திரன் 1950 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நீராவியடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி ரகுலேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-07-2026

அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா

நீ இறையடி எய்து ஓர் ஆண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!

கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ ஓர் ஆண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்

ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos