யாழ். பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நீராவியடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ரகுலேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து இலங்கை வேந்தன் மண்டபத்தில் இல. 63, கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
34/3 A, புகையிரத நிலைய வீதி,
1 ஆம் ஒழுங்கை, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
I am so sorry for your loss. Our deepest condolences to you and your family. Dyan Rajasingham