Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 OCT 1932
இறப்பு 21 JUN 2019
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர்
வயது 86
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர் 1932 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 07/07/2023

தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா!

அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!

நான்காண்டுகள் என்ன
ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம்
நினைவலைகள் எம்மிலே வாழும்....
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை' அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்...!!!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 24 Jun, 2019
நன்றி நவிலல் Mon, 22 Jul, 2019