Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 JAN 1967
மறைவு 04 SEP 2019
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார்
SKS Asiamarkt உரிமையாளர்
வயது 52
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் 1967 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்தாண்டுகள் கடந்து விட்டதா
 நம்பவே முடியவில்லை!
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
 உங்கள் நினைவுகள் நீங்காது!

லைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உங்கள் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
 பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்!

வீசும் காற்றினிலும் நாம்
விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள் நினைவால்
வாடுகிறோம்!

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த
எமது அன்புத் தெய்வமே அப்பா...
உங்கள் நினைவலைகள் என்றும் எம்
நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
 வாழும் குடும்பத்தினர்...

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos