Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 JAN 1967
மறைவு 04 SEP 2019
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார்
S.K.S. Asiamarkt உரிமையாளர்
வயது 52
அமரர் சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் 1967 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கிருஷ்ணகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுக்கொருமுறை அஞ்சலி போதுமா
எம் தெய்வத்திற்கு தினம்தோறும்
 உங்களின் நினைவுகள் கண்ணீராய்
எம் - கண்களில்....

இன்றுபோல் இருக்கிறது
இதற்கிடையில் மூன்றாண்டும்
சென்றதுவோ?

ஒரு முறையாவது உங்களை
பார்க்க மாட்டோமா என்று
 பதறுகின்றோம் இனியொருபோதும்
உங்களை பார்க்க மாட்டோமே
 என்கின்ற போது எம் உயிர்
சோர்ந்து போகிறதே.

நீங்கள் இல்லாத உலகம்
 நிம்மதி இழந்து தவிக்க
போகும் பாதைகள் புரியாமல்
நித்தமும் நினைக்கையில்
கண்ணீர் ஆறாய்
பெருக்கெடுத்து பாயிது அப்பா

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும்
 நிகழ்வுகளும்.

எம்மை வாழவைத்த அன்புத்தெய்வத்திற்கு
கோடானகோடி நன்றிகளும் அஞ்சலியும்!!!

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

Notices