Clicky

பிறப்பு 15 DEC 1920
இறப்பு 12 OCT 2022
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு
இளைப்பாறிய அதிபர்
வயது 101
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு 1920 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
15 DEC 1920 - 12 OCT 2022
Late Sinnathamby Karthigesu
நெடுந்தீவு மண்ணிலே பிறந்து 100 ஆண்டுகளுக்கு(centenarian ) மேலாக வாழ்ந்து காட்டிய பெருமைக்குரிய மனிதனாக கனேடிய மண்ணிலே வலம் வந்த உறவினர், ஆசிரியர், அதிபர் அமரர் சின்னத்தம்பி காத்திகேசு மாஸ்டர் அவர்கள். மதிப்பு மிக்க ஆசானாக நெடுந்தீவு மண்ணையும் நெடுந்தீவு மக்களையும் நேசித்த ஒரு சமூக சேவையாளர். எமது அடுத்த தலைமுறையினருக்கு ஒரு மனிதன் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழலாம் என வாழ்ந்து காட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த மனிதரில் ஒருவராக காலம் என்றும் மறக்க முடியாத மனிதனாக என்றென்றும் அவர் எங்கள் நினைவுகளில் நிறைந்திருக்கின்றார். அமரரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் துயரில் பங்கெடுத்து ஆறுதல் அஞ்சலிகளை அவர்களுக்கு தெரிவித்து கொண்டு அமரர் காத்திகேசு மாஸ்டர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute