யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கார்த்திகேசு அவர்களின் நன்றி நவிலல்.
தென் இந்தியாவில் சோழவள நாட்டில் சிற்றம்பலவர் வழித்தோன்றலில் இருந்து உருவாகிய நாகப்பர் சின்னத்தம்பி கார்த்திகேசு ஆகிய எங்கள் தந்தை 15.10.1920 இல் பிறந்து நல்ல மகனாகவும், அன்புள்ள கணவன், தந்தை, மாமா, பேரன், பூட்டனாகவும் மனிதாபிமானமுள்ள மனிதராகவும் வாழ்ந்து நூற்றாண்டு கடந்து நிறைகுடமாக 12.10.2022 இல் இறைபதம் அடைந்தார்.
இவரது முதுமை காரணமாக வெளியில் சென்று வரமுடியாத நிலையில், அவரது உடல் நலம் கருதி இல்லத்திற்குச் சமூகம் தந்து மருத்துவ உதவிகள் வழங்கிய குடும்ப வைத்தியர் திருமதி. இராஜேஸ் லோகன் அவர்களுக்கும், கடமைக்கும் அப்பால் அன்புடன் பராமரிக்க உதவிய தனிப்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கும் (personal support workers) முதலில் எங்கள் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.
12.10.2022 இல் எங்கள் தந்தையின் மறைவுச்செய்தி அறிந்ததும் உடன் வைத்தியசாலைக்குச் சமூகம் தந்து எமக்கு ஆறுதலும், ஆதரவும் அளித்து உறுதுணையாயிருந்து ஈமக்கிரியைகள் நடாத்த உதவிய எங்கள் அன்புக்குரிய திரு.கருணா.கோபாலபிள்ளை அவர்களுக்கும் எமது நன்றிகள்.
எங்கள் இல்லத்திற்கும், பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கும் வருகை தந்து எங்கள் துயரைப் போக்கி ஆறுதல் அளித்ததுடன் இறுதி அஞ்சலி செலுத்தியோருக்கும் எமது நன்றிகள். அத்துடன் மலர் வளையங்கள், மலர்க்கொத்துக்கள், மலர் மாலைகள், கண்ணீர் அஞ்சலிகள் வழங்கியோருக்கும் குடும்பம் சமுகம் இரண்டிலும் சமபங்கு வகிப்பவரான எங்கள் மதிப்புக்குரிய அதிபர். திரு.த.சிவபாலு அவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்வுக்குத் தலைமை தாங்கிச் சிறப்புற நடாத்தியமைக்கும், அஞ்சலி உரைகள் ஆற்றிய அனைவருக்கும் நன்றிகள். சுயமாக முன்வந்து சிறப்பாக உணர்ச்சி பூர்வமாகப் பக்திப் பெருக்குடன் பஜனை, தேவார திருமுறைகள் ஓதியோரான திரு.சோம.சச்சிதானந்தம் அவர்களுக்கும், திருமதி.யோகா.பத்மநாதன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இலங்கையில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், மடு, யோகபுரம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மொனராகல, குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் மனிதநேயக்குழுவினர் இணைந்து அஞ்சலிகளையும் சிறப்பு ஒன்று கூடலையும் ஒழுங்கு செய்து நடாத்தியமைக்கும் இத்துடன் யோகபுரம் மல்லாவியிலுள்ள தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் செயலாளர் திரு.சு.சுபநேசன் அவர்களின் தலைமையில் திரு.க.பிரதீபன், திரு.பொ.கோணேஸ்வரன், திருமதி.ச.முருகம்மை, செல்வி.து.பிரசா, செல்வி.ச.சஜீபா ஆகியோரின் ஏற்பாட்டில் பலர் சமூகம் தந்து அஞ்சலி நிகழ்வு மற்றும் சிறப்புரைகளும் ஆற்றப்பட்டு நினைவு கூர்ந்தமைக்கும் எமது நன்றிகள். அவ்வாறே மனிதநேயர் திரு.சி.சீனு தலைமையில் அம்பாறையில் பஜனை மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தியமைக்கும் எமது நன்றிகள்.
மரண நிகழ்விலிருந்து முப்பத்தொராம் நாள் வரை தொடர்சியாக உணவு வகை மற்றும் தேவைப் பொருட்கள் வழங்கியவர்களுக்கும், தொலைபேசி மற்றும் தொடர்புச் சாதனங்கள் மூலம் தங்கள் அன்பினையும், அஞ்சலியையும், அனுதாபங்களையும் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.
ஈமக்கிரியைகள் முதல் அந்தியேட்டி, முப்பத்தொராம் நாள் வீட்டுக்கிரியை, சபீண்டீகரண நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்புறச் செய்த மதிப்புக்குரிய அந்தணப் பெருமக்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். ஈமக்கிரியைகள், நல்லடக்க நிகழ்வுகளை ஒழுங்காகச் சீரமைத்து உதவிய Ajax தகனக் கிரியை மண்டபப் பொறுப்பாளர் திரு.தர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இந்நினைவு மலரினை அழகுற அச்சிட உதவிய திருமதி.ர.சசியந்தினி, திரு.ரமேஸ் அவர்களுக்கும் எமது நன்றிகள். இறுதியாக யாருக்காவது நன்றி கூறத் தவறியிருந்தால் அதனை மன்னித்து நன்றியை ஏற்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.