Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 31 MAY 1929
விண்ணில் 25 APR 2025
அமரர் சின்னத்தம்பி கோபாலன்
வயது 95
அமரர் சின்னத்தம்பி கோபாலன் 1929 - 2025 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:13/05/2026

யாழ். கந்தரோடை பொன்னையா தோட்டத்தினைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கோபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் 
ஆறமுடியவில்லை எம்மால் 
இப் பூமியில் உங்களை நாம் 
இழந்த துயரை ஈடு செய்ய 
முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய் 
பாசத்தின் பிறப்பிடமாய்
 பண்பின் உறைவிடமாய் 
வாழ்வின் வழிகாட்டியாய் வாழ்ந்த 
எம் குள விளக்கே!

உங்களையே உலகமென உறுதியாய்
 நாமிருக்க ஏன் விண்ணுலகம்
 நிரந்தரமாய் விரைந்தீரோ?

கலையாத உங்கள் முகமும்
 கள்ளமில்லா உங்கள் சிரிப்பும் 
இனி காண்பது எப்போது? 

வீசும் காற்றினிலும் நாம் 
விடும் மூச்சினிலும் எட்டு 
திக்குகளிலும் உங்கள் நினைவால்
 வாடுகிறோம் ஐயா!

தூக்கம் கெடும் போதும் 
சொல்கின்றது உங்கள் நினைப்பு 
தூங்கி எழும் போதும் கனக்கின்றது 
எம் இதயம் வாழ்வு அது நிஜமல்ல
 உணர்ந்தோம் உங்கள் பிரிவால்

உங்கள் இழப்பை ஈடு செய்ய
 முடியாமல் தவிக்கின்றோம் மீண்டும்
 பிறந்து வருவீரா எம் அன்பு ஐயாவே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos