Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1973
இறப்பு 12 MAY 2023
அமரர் சின்னத்தம்பி அகிலதேவன் (ரஞ்சன்)
வயது 49
அமரர் சின்னத்தம்பி அகிலதேவன் 1973 - 2023 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அகிலதேவன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆண்டு மூன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு

ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எங்கள் சகோதரனே

சகோதரனே என்று நாங்கள்
அழைக்கின்றோம் ஆனாலும்
நீங்கள் வரவில்லையே 
சகோதரனே

புன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது 
ஆனாலும் அது நிஜமில்லை என்று
தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது 
விழிநீர் சொரிகிறது 
சகோதரனே
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு 
சகோதரனே

நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
எம்மடியில் வந்து விடுங்கள் 
சகோதரனே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!

தகவல்: சகோதர - சகோதரிகள்.

Summary

Photos