யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அகிலதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் அன்பை முத்தமிட்டு
இழப்பை தாங்க முடியாது சத்தமிட்டு
சித்தமினிக்கும் எங்கள் சகோதரன் இறைவனடி
எண்ண முடியாத நேரத்தில் எம்மை விட்டு நீங்கினார்
காலன் காத்திருந்தான் கல்லறையில் புதைப்பதற்கு
காலம் பதில் கூறுமா உறவுகள் தவிப்பதற்கு
முத்தைத் தொலைத்த மூக்குத்தியாய்
முகவரி இழந்த காகிதமாய்
விழி இழந்த குருடராய் நாம் ஆனோம்
வேரிழந்த மரமாய் காடிழந்த விலங்காய்
நீரில்லா மீனாய் நெருப்பில் விழுந்த புழுவாய்
நாம் இங்கு துடிக்கிறோம்
காத்திருக்கின்றோம் நீ நிட்சயமாய்
வருவாய் என்று
ஓர் ஆண்டுகள் அல்ல
ஓராயிரம் ஆண்டு கடந்தாலும்
உன் நினைவுகள் எம் உள்ளத்தில்
என்றென்றும் நிலைத்திருக்கும்.
உங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்...