மீசாலை வடக்கு கொடிகாமத்தை பூர்வீகமாக கொண்ட சின்னத்தம்பி திரவியநாயகம் அவர்கள் இறைபதமடைந்த செய்தி ஆழ்ந்த வருத்தைத்தருகிறது . புகழ்மிகு சிட்டிபுரம் அம்மன் ஆலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் சரக்கர் என்று அழைக்கப்படும் திரு சின்னத்தம்பி அவர்கள் . ஆலய மஹாற்சவ காலங்களில் கைலாயர் , சரக்கர் ,கொடிகாம ம் ஐயாக்குட்டி ( இலங்கைத் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ) இவர்களின் பங்கு மிகப்பெரியது . தந்தை வழியில் தனயன் திரு திரவியம் என அன்பாக அழைக்கப்படும் திரவியநாயகமும் ஆலய வளர்ச்சியில் ஈடுபட்ட ஒருவர் . அவர்களின் வம்சத்திற்க்கு என ஒரு திருவிழா கூட இருந்தது . அத்தகைய நல்ல சைவப் பாரம்பரியத்தைக் கொண்ட திரவியநாயகத்தின் இழப்பு பேரிழப்பாகவும் . முதுமைக்காலத்திலும் ஊரிலும் , ஊரவர்கள் மீதும் பற்றும் பாசமும் கொண்ட பெருமகனார் . என்னோடு முகஙாலில் உரையாடுவார். தந்தைக்குப் பின் தனது சகோதர சகோதரிகளுக்கு கூட ஒரு தலைமகனாக இருந்து தந்தை ஸ்தானத்தில் வழிநடத்திய பெருமகனார் . அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சாழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, ஆத்மா சொர்க்கத்தில் அமைதி பெற பிரார்த்திக்கிறேன். ஒம் சாந்தி சாந்தி !!!!