1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி திரவியநாயகம்
வயது 79
அமரர் சின்னத்தம்பி திரவியநாயகம்
1945 -
2024
கொடிகாமம், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 20-12-2025
யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி திரவியநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
புத்திமதிகள் பல சொல்லி
நாம் புரியும்படி பல கதைகள்
சொல்லி சஞ்சலம் இன்றி இல்வாழ்வு
வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லி
எம்மை செம்மையாக அனைவரையும்
அன்புடன் அரவணைப்பவர்!
மண்ணில் எங்கள் வாழ்வதனை நாளும்
கண்ணில் மணிபோல் காத்து நின்றீர்- இன்று
விண்ணில் இருந்து வழி நடத்தும்
மண்ணில் அடங்கா உன் அன்பை இழந்தோம்
உங்களை இழந்து ஓராண்டு சென்றாலும்
ஆற்றமுடியாத துயரத்துடன்
உங்கள் நினைவுகளுடன்
தொடர்ந்து பயணிக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்