

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்
கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!