2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 MAR 1947
இறப்பு 08 AUG 2020
அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் (ஜெயம்)
வயது 73
அமரர் சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் 1947 - 2020 கரணவாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் வடக்கு தாமோதர வித்தியாசாலையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தர்மகுலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

பூவுலகு விடைகொடுக்க
பொன்னுலகை அடைந்து
 புகழ் மேலுலகில் மேன்மை பெற்று
மேலான பதமடைந்தீர்!

நீங்காத நினைவுகளால்
நீர் மல்கும் விழிகளுடன்
தாங்காத மக்கள் உற்றார் உலகோர்
 ஏங்காத நாளில்லை
ஏன் பறந்தீர் எம்மைவிட்டு? 

அப்பா அப்பா என்று தினம்
அழைத்து கனவிலாவது தினம்
காண்பதற்கு ஏங்குகின்றோம் அப்பா

ஈராண்டு சென்றதுவே ஆனாலும்
எம்துயர் தீரவில்லையே
 எம் ஆயுள் உள்ளவரை உங்கள்
ஞாபகம் எங்கள் நெஞ்சினிலே நீங்காதப்பா

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 10 Aug, 2020
நன்றி நவிலல் Mon, 07 Sep, 2020