Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 03 APR 1926
உதிர்வு 14 FEB 2024
அமரர் சின்னப்பு கனகசபை
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 97
அமரர் சின்னப்பு கனகசபை 1926 - 2024 அளவெட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், உசனை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகசபை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மனியளவில் கனடா கந்தசாமி கோயிலில் நடைபெறும். அதேசமயம் மகேஷ் மஹால் உசன் மிருசுவில் இலங்கையில் உள்ள  அன்னார் வாழ்ந்த இல்லத்திலும் நினைவஞ்சலி நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.