Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 NOV 1944
இறப்பு 27 DEC 2020
அமரர் சின்னத்துரை கருணரட்ணம் (குமரேஷ்)
இளைப்பாறிய Brown & Company உத்தியோகத்தர்- இலங்கை
வயது 76
அமரர் சின்னத்துரை கருணரட்ணம் 1944 - 2020 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், பழைய பூங்கா வீதியை வசிப்பிடமாகவும், தற்போது Lincolnshire United Kingdom ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை கருணரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16-12-2021

அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி

இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப்போனது இன்னமும்

நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

உழைப்பை உரமாக்கி பாசமாய்
பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே...

ஓராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள்
எமை தினமும்
வாட்டி வதைக்கின்றது..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்