

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், பழைய பூங்கா வீதியை வசிப்பிடமாகவும், தற்போது Lincolnshire United Kingdom ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கருணரட்ணம் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் பாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற அன்னராணி(ஆச்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கலைச்செல்வி(செல்வி- Lincolnshire, United Kingdom) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பராசக்தி, தவமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சீவரட்ணம், மகேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமார்(Lincolnshire - United Kingdom) அவர்களின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
சிவராணி(கனடா), இந்திராணி(திருகோணமலை), பாக்கியராணி(யாழ்ப்பாணம்), செல்வராணி(கொழும்பு), சிவராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
குலசேரகரம்(கனடா), நகுலேந்திரன்(திருகோணமலை), கனகராசா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற நீலிகா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
டிவர்ஷன்(Lincolnshire - United Kingdom), நிருஜன்(Lincolnshire - United Kingdom), விஷ்ணுதன்(Lincolnshire - United Kingdom) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜோதிமலர்(கனடா), சிவசக்தி(கனடா), மகேந்திரா(கனடா), விஜேந்திரன்(கனடா), ராஜேந்திரா(கனடா), அன்பழகன்(அவுஸ்திரேலியா), அருட்செல்வன்(கனடா), அன்புச்செல்வன்(நோர்வே), வட்சலா(United Kingdom), அரவிந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கலைவாணி(கனடா), சிறி ஆறுமுகராஜன்(கண்ணன்- Lincolnshire- United Kingdom), ஹெரால்ட் தர்மேந்திரன்(திருகோணமலை), கிருஷ்ணநிவ்யா(கனடா), போல் மோகனச்சந்திரன்(திருகோணமலை), நிஷாந்தி(கொழும்பு), காயத்திரி(கொழும்பு), ஜனுஷன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அபிலாஷ்(கனடா), அனுஜன்(கனடா), ஆதிரன்(கனடா) ஆகியோரின் மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறவிருக்கின்றது என்பதை அனைவருக்கும் மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
அப்பா! அப்பா! என் ஆரூயிர் அப்பா!!!
மண்ணில் பிறப்போர் எல்லோர்க்கும்
மரணம் என்பது இயற்கை தான் - ஆனால்
இமை மடல்களை மூடி விழிக்கும் முன்
இறைபதம் அடைவீர்கள் என்று எண்ணவில்லை அப்பா!!!
இயற்கையில் ஓர் விதிவிலக்காகி இன்னும் எம்முடன்
இணைந்து இருக்க கூடாதா என்று ஏங்குகிறேன்
உங்கள் அருமை மகள் நான் அப்பா!!!
ஒவ்வொரு பொழுதிலும் நீங்கள் ஒப்புவித்த வாழ்க்கைப் பாடங்கள்
ஒருபுறம் எம்மை ஒழுங்குடன் வழிநடத்த-உங்கள்
இறப்பிலும் எமக்கெல்லாம் இறுதிப்பாடம் சொல்லிச் சென்றீர்களே
இன்முகத்துடன் அப்பா!!!
வருந்தும் என்னிடம் வார்த்தைகள் இல்லாமல் வாடுகின்றேன் அப்பா!!!
விழிகள் காண முடியாமல் வானில் கலந்த உங்களை
வழியும் கண்ணீர் மழையினிலே மலர்தூவி மனதால்
உங்கள் பாதம் தொட்டு வணங்கி எம் விரல்கள் விடைதரும்
விந்தைநிலை தான் ஏனோ அப்பா!!!
காலம்கொண்ட கோலத்தால் இன்று எம் கடவுள் நீங்கள்
கண்ணில் இருந்து மறைந்தீர்கள் அப்பா!!!
சோகம் எங்கள் நெஞ்சோடு ஆனால்
உங்கள் சுகமான நினைவுகள்
நடைபோடும் எந்நாளும் எம்மோடு
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
You have treated me like as your own son PAREYAPPA. I have felt it from my Childhood. Me and My family will miss you a lot. However you are always in our heart Pareyappa