2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Limburg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுதாகர் சிங்கராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
அப்பா என்றழைக்க நாம்
தேடி வரும் வேளையில்
நீங்கள் விண்மீனாய்
தொலைதூரம் போனதேனோ?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமோ...
இன்றும் உன் பிரிவால் எம்
இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம் அப்பா...!
எமது ஆருயிரே
உன் இழப்பால் வாடுகின்றோம்
வந்திடுவாய் எம் மனக் கண்முன்னால்
ஆண்டவரிடம் மன்றாடி உங்கள்
ஆத்மா சாந்திபெற வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்