யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சேதுராஜா(கண்ணன்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 31-01-2026 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Barnhill Community Centre, Ayles Road, Hayes UB4 9HG எனும் முகவரியில் நடைபெறும். அத்தருணம் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு
வழிகாட்டி பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
எம் மனங்களில் வாழுதையா...!!!
தன்னுடைய கடமைகளை கவனமாக
செய்து முடித்து தனியாக இப்போது
எம்மை விட்டு போய்விட்டார்
நாட்கள் முப்பத்தொன்று அல்ல
ஆயிரந்தான்
சென்றாலும்
உங்கள் தோற்றமும்
உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை
நெஞ்சில் நிறைந்து இருக்கும்
என்றும் உங்கள் நினைவுடன்
வாழும்
குடும்பத்தினர்...
Deeply saddened to hear about the passing of Kannan Sithappa. My sincere condolences to his family and loved ones. Wishing them strength and peace during this very difficult time.