4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், இல.722 யோகபுரம் மத்தி மல்லாவியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகராசா தவயோகம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டு நான்கு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா..
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா..
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்..
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா..
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
We are very sorry for your loss. Our condolences to your family. Rest in peace Mrs Shanmugarasa Thavayogam.