
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், இல.722 யோகபுரம் மத்தி மல்லாவியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகராசா தவயோகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 12/05/2023.
பாசத்திற்கும் பண்பிற்கும் அரவணைப்பிற்கும்
பாரில் இலக்கணமாய் விளங்கிய எங்கள் அன்னையே!
உங்கள் முகம் கண்டு ஆண்டு ஒன்று ஆனதோ அம்மா...!
தாயே நீ சென்று ஓராண்டு ஆனாலும்
என்றும் எம் நெஞ்சில் நீங்காத நினைவாக
பார்க்கும் இடமெல்லாம் உன் உருவம் தெரிகிறதே!
பாவி நெஞ்சம் நேரில் பார்த்திடத் துடிக்கிறதே!
காலன் ஒரு நாள் உனை விடுமுறையில் விடுவானோ
ஓடிவந்து நீ எமக்கு அமுதூட்டி விடுவாயோ...
உன் மடியில் ஓர் நிமிடம் உறங்கத் தருவாயா...?
ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில் எமக்கினி யார் தருவார்?
நிலையில்லா இவ்வுலகை விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
இந்நாளில் உங்களை நினைவு கூரும் கணவர், அன்புப் பிள்ளைகள்,
பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
We are very sorry for your loss. Our condolences to your family. Rest in peace Mrs Shanmugarasa Thavayogam.