31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 13 MAY 1957
இறைவன் அடியில் 19 MAY 2021
திருமதி சண்முகநாதன் தில்லைநாயகி
வயது 64
திருமதி சண்முகநாதன் தில்லைநாயகி 1957 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தில்லைநாயகி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

“உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வமே அம்மா!!

 உன்னுடைய இடம் என்றும் உனக்கு மட்டும் தான் அம்மா....
அம்மா என்ற இடத்தினை வெற்றிடம் ஆக்கி சென்று விட்டாயே
வெறுமையுடன் வாழ்கின்றோம் மீண்டும் எம்மிடம் வா

எங்கள் அன்பு அம்மாவும் எங்கள் உயிருக்கும் மேலான சண்முகநாதன் தில்லைநாயகி(பாமா) அவர்கள் காலமான செய்தி கேட்டு ஒடோடி வந்து எமது துயரைப் பகிர்ந்து கொண்டவர்கள், அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியோர் மற்றும் உதவிகள் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி, சமூக வலைத் தளங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு எமது துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், பிள்ளைகள்
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.