2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் நவரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!
கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
Rorschach மக்கள்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் Sivanathan Thamotharampillai Basel. Binningen.