Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 21 MAR 1963
இறப்பு 16 JUN 2026
திரு சண்முகநாதன் ஜெகநாதன் 1963 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

**********************************

கடல் ஏழும் கடந்திடக் காணாத்தூரம்
 எமை விட்டுவிலகிச் சென்றீரோ

 உடல் வாழும் காலமெலாம் மறவா வண்ணம்
 உமை நினைந்து கலங்க வைத்தீரோ

 குடல் சூழும் பசியினும் கொடிய பிரிவினை
 இமை மூடி எமக்குத் தந்தீரோ

 மடல் வீழும் ஆயிரங்கவி சொலாத் துயரில்
நமையாழ்த்தி நீர் விடைபெற்றீரோ!!! 

******************************

கடந்த 16.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமான அமரர். சண்முகநாதன் ஜெகநாதன் (ஜெகா) அவர்களது மறைவினால் நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி ஊடாகவும், சமூக வலைதளங்கள் மற்றும் RIP BOOK மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் மற்றும் பதாதைகள் வழங்கித் துயர் பகிர்ந்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் இன்றுவரை எமக்குப் பல வழிகளில் உதவி புரிந்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

குறிப்பாக, எமக்குப் பக்கபலமாக நின்று பல வழிகளில் நிகரற்ற உதவிகளைப் புரிந்துள்ள அமரர். ஜெகநாதன் அவர்களின் நண்பர்களுக்கு விசேட நன்றிகளையும் மனப்பூர்வமாகத் தெரிவிக்கின்றோம்.

***********************************

We extend our heartfelt gratitude to everyone who offered condolences—in person, by telephone, via social media, or through RIP book—and those who took part in our grief by offering floral garlands, wreaths and banners, following the passing of our dearest family member, Late Mr. Shanmuganathan Jeganathan (Jega) on Tuesday, 16th June, 2026. We also sincerely thank and extend our gratitude to our kith and kin, friends, well-wishers, and all the kind-hearted individuals who have supported us in various ways throughout this difficult time.

Our special thanks and profound gratitude to Late Mr. Jeganathan's friends who have stood with us as pillars of strength and provided invaluable support.

**********************************

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.