Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAR 1963
இறப்பு 16 JUN 2026
திரு சண்முகநாதன் ஜெகநாதன் 1963 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜெகநாதன் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கலாபூஷணம் சண்முகம்பிள்ளை (சண்முகநாதன்) விஜயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜரட்ணம், கௌரி (கனடா) தம்பதிகளின் மருமகனும்,

ஹம்சஜோதினி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

நவீன் ஆதித்யா (கனடா), அனீஷ் கௌதம் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பிரகதாம்பாள், விஸ்வநாதன் (முன்னாள் பணிப்பாளர் - தமிழ் நிகழ்ச்சிப்பிரிவு, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்), மற்றும் வாசுகி (ஸ்தாபக இயக்குனர் - நாட்டிய கலா மந்திர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தில்லைநடராஜா, சாந்தி, ஜெகதீஸ்வரன், மஞ்சுஷா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அனுராஜன் (அமெரிக்கா) அவர்களின் சகலனும்,

பிரகதீஷ் (கட்டார்), அபயகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

விஜய் அபிநந்தன், ஹரிணி அம்ரிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஆருத்ரன்(அமெரிக்கா), ஆதர்ஷன் (அமெரிக்கா) ஆகியோரின் பெரியப்பாவும்,

உதேஷினி (கட்டார்), பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகில் அஷ்வின் (கட்டார்), ஆகர்ஷா (கட்டார்), ஆத்யஸ்ரீ ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-06-2026 சனிக்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் Jayaratne Respect Home, இல. 483 பௌத்தலோகா மாவத்தை, கொழும்பு 08 இல்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக அன்னாரின் இறுதி அஞ்சலி(20-06-2026) மற்றும் இறுதிக்கிரியை(21-06-2026) நடைபெறும் இரண்டு நாட்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இறுதி அஞ்சலி(20-06-2026) Live Link :Click Here 
இறுதிக்கிரியை(21-06-2026) Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

S. விஸ்வநாதன் - சகோதரன்
வாசுகி ஜெகதீஸ்வரன் - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Babu! we will miss you a lot. Your old neighbours Kumaran, Subhangini, Hari From Narendran

RIPBOOK Florist
Norway 3 weeks ago