யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் அருள்நாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:02/06/2024
எம் அப்பா!
எம் வாழ்க்கை!
நம் நம்பிக்கை!
நம் தைரியம்!
முழுமையாக இருந்த எம் குடும்பத்தின் முதல்வர்
நீங்கள் இல்லாது இக்குடும்பம் இன்று முழுமை இழந்து விட்டது!
நீங்கள் எமை விட்டு பிரிந்து இன்றுடன் ஆண்டொன்று ஓடிவிட்டது.
கடந்த இந்நாட்களை எண்ணுகையில்
எம் நெஞ்சமெல்லாம் வருடுகிறது அப்பா!
எம் உயிர் உள்ளவரை எம் நினைவுகளில்
நீங்கள் இருப்பீர்கள் என்றாலும்
உங்கள் பிரிவு
எமக்கோர் மீள் நிரப்ப முடியா வெற்றிடமே!
உயிர் பிரியும் நொடியில் கூட நம்மறுவருக்கும்
நீங்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு
ஈடிணையில்லை இவ்வுலகில்!
ஏகாதசி திதியில் சிவன் பாதத்தில்
நித்திய இளைப்பாறி
எமை வழிநடத்த எல்லாம் வல்ல
முடிப்பிள்ளையாரை பிரார்த்திக்கின்றோம்
என்றும் உங்கள்
பேரன்பின் நினைவுகளில்
அன்பு
மனைவி,
பிள்ளைகள்..!