

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செந்தாமரைச்செல்வி பரமேஸ்வரன் அவர்களி்ன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
அம்மா என்ற சொல்லிற்கு இலக்கணம் வகுத்தவளே
அன்பின் உருவாக, கருணையின் வடிவாக,
பண்பின் பிறப்பிடமாக, பாசத்தின் ஊற்றாக,
கண்மணி போல் எமை எல்லாம் காப்பவரே...
காலங்கள் கடந்து சென்றாலும் கடலுடன்
என்றுமே வாழும் அலைகள் போல் என்றும்
உங்கள் நினைவுடன் நாங்கள் வாழ்வோம் அம்மா..
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..