யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா சதிஸ்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும்
அரவணைத்தாய் அல்லும் பகலும்
அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய்
வாழ்ந்து நின்றாய்!
உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்!
உயிர் உள்ள வரை எங்களோடு
இருப்பேன் என்றாய்!
ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are sorry for your loss. May his soul rest in peace