Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUN 1935
இறப்பு 09 JAN 2021
அமரர் பார்வதி சேனாதிராஜா 1935 - 2021 மலேசியா, Malaysia Malaysia
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவடமாகவும் கொண்டிருந்த பார்வதி சேனாதிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
 கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே

உன் கரம்பிடித்து நடந்த நாட்கள்
 நீ தாலாட்டுப்பாடி உறங்கிய நாட்கள்
 அமுதூட்டிய உன் அன்புக்கரங்கள்
 இதயத்தின் ஆழத்தில் புதைந்த வேர்களாய்
நித்தம் நித்தம் அலை மோதுதம்மா

உனை இழந்து வருடம் ஓன்று ஆனபோதும்
காலத்தின் கணக்கு தப்பாமல் போனபோதும்
 ஞாலத்தில் நீ இல்லையென உணர்ந்தபோதும்
நெஞ்சின் ஆழத்தின் வாழ்கிறாய் அம்மா
எம் உணர்வோடு நீ கலந்துவிட்டாய் அம்மா

மாண்டார் வருவதில்லை என
காலங்காலமாய் கூறி வந்தாலும்
மீட்டும் உன் நினைவுகள்
மீண்டும் வரமாட்டாயா என
 ஏங்கித் தவிக்கும் இதயங்களின்
ஏக்கம் தீர்க்க நீ வருவாயா

கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை

நீ நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ

அம்மா எங்கள் அன்புத்தாயே
உன் ஆன்மா ஈடேற்றம் பெற
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை
அனைவரும் ஒன்றிணைந்து
 இறையடி தொழுகின்றோம்
உன் ஆன்மா சாந்தி பெறட்டும் அன்புத்தாயே!

தகவல்: ரவிச்சந்திரன்

தொடர்புகளுக்கு

சேனாதிராஜா - கணவர்
நற்குணராசா - மகன்
மல்லிகாதேவி - மகள்
மோகனா - மகள்
நாகராசா - மகன்
ரவிச்சந்திரன் - மகன்
ரவீந்திரன் - மகன்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 09 Jan, 2021
நன்றி நவிலல் Sun, 07 Feb, 2021