அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் மதியழகன் அவர்களின் 4ம் ஆண்டு நினைசஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே! உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
எங்கள் அன்புச் சகோதரனே உன்னை இழந்துவிட்டோம் அது உண்மைதான்.... எங்களின் நினைவுகளைக் கூடவெறும்... நினைவுகளாகவே துளைத்து விட்டோம்....
இப்போது தேடுகின்றோம் உன் எதிர்காலத்தையல்ல.. உன்னுடைய இறந்த கால நினைவுகளையே இனி ஏதும் பயனேதுமில்லை...
எட்டாப் பழம் புளிக்கும் என்று தட்டிக் கழிக்கவும் முடியவில்லை... ஏனெனில் அவை வெறும் நினைவுகள் அல்ல ஒவ்வொரு நினைவிலும் நீ இன்னும் எங்களுடன் இருக்கின்றாய்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!