யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பாசமும் பணிவும் அழகும்
நற்குணமும் புன்சிரிப்பும் அறிவும் பொறுமையும்
விட்டுகொக்கும் தன்மை கொண்ட
அம்மா, அப்பா, அக்கா, தம்பி எங்கள்
எல்லாருக்கும் பிடித்த என் மகனே ராசா!
அம்மாவை விட்டு எங்கு சென்றுவிட்டாய்
நான் இங்கே இருக்கிறேன் என்னைவிட்டு
எங்கு சென்றுவிட்டாய் ஐயா ராசா
திடீரென்று என்ன நடந்தது பெற்ற அடிவயிறு
நெருப்பாய் எரியுது இதயம் தீயாய் எரியுது
நானும் அப்பாவும் உன்னை எதிர்பார்த்து காத்திருந்தோம்
எங்களை பார்க்காமல் போவிட்டியோ என்னுடைய ராசா
உன் உயிரை பறித்தவர்களுக்கு நிச்சயமாக
இறைவன் தண்டனை ஒன்று உண்டு
இது அம்மாவின் சத்தியம்
என்னுடைய பிரியமான என் தம்பி அக்கா
அத்தான் இருக்கின்றார்கள் என்று நினைக்காமல்
எங்களை விட்டு ஏன் சென்றாய்
உனக்கு என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது
தெரிந்தால் நான் ஒடிவந்து காப்பற்றிவிட்டுருப்பேன்
உன் பிரிவு எதற்கும் ஈடுகொடுக்க முடியாது
இறைவன் தண்டனையில் இருந்து எவரும் தப்பமுடியாது
தம்பி உன்னுடைய மச்சி தன்னுடைய ராசா தனக்கு இல்லையே
என ஏங்கியவண்னம் நித்தம் இதயவலியுடனும் கண்ணீருடனும்
உன்னை நினைத்து வாடியகருகி இதயத்துடன் வாடியுள்ளர்
தம்பி உன் மருமகன் மருமகள் எங்களுடைய மாமாவுக்கு
ஏன் இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டும் என்று
ஏங்கி அழுகின்றார்கள்
தம்பி உன் உறவுகள் எல்லாரும் இதய வலியுடனும்
கண்ணீருடனும் ஏங்கி தேடுகின்றார்கள்
உன் பிரிவால் துயருறும் அம்மா, அக்கா, அத்தான்,
மருமகன், மருமகள், மாமிமார்கள், மாமன்மார்கள், மைத்தினார்மாரக்ள்
தம்பி நீ உயிருடன் திரும்பி என்னிடம் வா
உனக்காக நான் காத்திருக்கின்றேன்.