Clicky

பிறப்பு 07 OCT 1967
இறப்பு 10 SEP 2025
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை (செல்வன்)
வயது 57
திரு செல்வரத்தினம் மாப்பாணபிள்ளை 1967 - 2025 ஆறுமுகத்தான் புதுக்குளம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivakumaran Surendra 05 OCT 2025 United Kingdom

இன்று உங்கள் இறுதியாத்திரை எம் இதயம் எங்கும் பெருத்த கன மழை அன்று கண்ட கம்பீர உருவம் இன்று சாய்ந்து உறக்கம் கொண்டதோ. அன்று முதல் இன்று வரை அந்த புன்னகை முகம் மாறவில்லை அன்பான உபசரிப்பும் மாறவில்லை ரசிக்கும் குணம் மாறவில்லை - ஆனால் மெய்த்தூக்கம் ஆகியதே. உம்மைக் கண்ட காலனவன் உம் கம்பீர தோற்றம் கண்டு தன்னுள் அவன் கர்வங்கொண்டு உடனழைத்துச் சென்றவனோ. காலம் செய்த கோல மென்ன நான் கன தூரம் வந்ததென்ன உம் இறுதி ஊர்வலத்தில் கலக்காமல் தவிப்பதென்ன உங்கள் உன்னத ஆத்மா சாந்தி காண நாம் ஒன்றாகப் பிராத்திப்போம் - ஆம் நாம் ஒன்றாகப் பிராத்திப்போம்.🙏