
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Frankfurt Am Main ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா ஜெயபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் பாசமிகு தந்தையே ஆண்டு ஒன்று
ஆனது நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
அழுது அழுது புலம்புகின்றோம்
உங்கள் பிரிவு தாங்காமல்
ஒர் ஆண்டு அல்ல பல
பத்தாண்டுகள் ஆனாலும்
மறவோம் உங்களை
அன்பின் பிறப்பிடமாய் பாசத்தின் உருவாய்
நேர்மை தவறாத பண்பாளனாய்
நல்லதோர் மகனாய்
மருமகனாய் சகோதரனாய்
மைத்துனனாய் தந்தையாய்
எல்லோருக்கும் உதாரணமாய்
திகழ்ந்தீர்கள் அப்பா!
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு வாழ்ந்தீர்கள்
அப்பா!
என்றும் நீங்கா நினைவுகளுடன் தங்களைப்
பூஜிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள்...
அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!...