யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி செல்வராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
எங்கள் குடும்பக் குல விளக்கு செல்வராணி செல்வராசா அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும், இரங்கல் செய்தி, கடிதங்கள், தொலைபேசித் தொடர்புகள் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், சகல வழிகளிலும் ஆதரவு வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் உதவிகள் புரிந்தும், நலன் விசாரித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், இறுதி ஊர்வலத்திலும், கிரியைகளிலும் கலந்துகொண்டு ஒத்தாசை புரிந்த நெஞ்சங்களுக்கும் அந்தியேட்டிக் கிரியைகளிலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளிலும் வீட்டுக்கிரியை நிகழ்விலும் கலந்துகொண்ட அனைவருக்கும், நினைவலைகள், நினைவஞ்சலிகள், ஆக்கிக்கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கும், நன்றிகள் உரித்தாகுக.