யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா செல்வநாயகி அவர்களின் நன்றி நவிலல்.
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே
பாசம் என்ற சொல்லுக்கு பொருளும் நீயே
இவ்வுலகில் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்
ஒரு உறவு நீ மட்டுமே
எங்களின் இதயக் கூட்டில் உண்மையான
ராணி அம்மா நீ மட்டும் தான்
எண்ணற்ற ஏக்கங்கள் எங்களுள் அருவியாய்
ஓடும்போதெல்லம் அன்பென்ற அணைகட்டி
எங்களுள் இன்பம் பொங்க செய்தாய்
உன்மடி சாய்ந்து உறங்கும்போது எங்கள் கவலை
எல்லாம் மறந்து போகும் எங்கள் சோகமெல்லாம்
சுகமாய் மாறும்
வார்த்தைகளே இல்லாத வடிவம் அளவுகோலே
இல்லாத அன்பு சுயநலம் இல்லாத இதயம் வெறுப்பு
காட்டாத முகம் அம்மா என்று அழைக்கையில்
வலிகொண்ட இதயம் கூட வலிமறந்து சிரிக்க
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை
மட்டுமே தேட வைத்தாய் அம்மா
அம்மா
நீங்கள் இறையடியில் கண்மூடி
அமைதியோடு சாந்திபெறவேண்டி கண்ணில் நீரோ
பிரார்த்திக்கின்றோம் அம்மா
பிள்ளைகள் : நிஷாந், நிவேதா, நிலானி
எமது அன்புத்தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்ற வேளையில், நேரில் வந்தும்(கனடா, பிரித்தானியா, டேன்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ்), தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சலி, RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
துயர்பகிர்கின்றோம் யோகேஸ்