
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவராசா செல்வநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-03-2023
"சிந்தனைச் சிற்பியாய்
சிறந்த நல் மனைவியாய்”
வந்தனை செய்தே நல்வளமான
வாழ்வு தந்தாயே!!
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
உந்தனை நினைக்கையிலே உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம் என் செய்வோம்
எம்தனை தவிக்கவிட்டு எங்குதான் சென்றீரோ?
நீ எனைவிட்டுப்போய் ஆண்டு ஒன்று ஆனாலும்
உம் நினைவோடு எங்கள் நாட்கள் கரைகிறதே...
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து
போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில் கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து
கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்
உங்களை நினைக்காத நொடிகளில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கின்றோம் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...!!!!
துயர்பகிர்கின்றோம் யோகேஸ்