Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 DEC 1936
இறப்பு 24 JUN 2022
அமரர் செல்வநாயகம் சிவசுப்பிரமணியம்
வயது 85
அமரர் செல்வநாயகம் சிவசுப்பிரமணியம் 1936 - 2022 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் சிவசுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.      

ஆண்டுகள் நான்கு உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்

கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்

வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்