Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 DEC 1936
இறப்பு 24 JUN 2022
அமரர் செல்வநாயகம் சிவசுப்பிரமணியம்
வயது 85
அமரர் செல்வநாயகம் சிவசுப்பிரமணியம் 1936 - 2022 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் சிவசுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.    

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா 
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?

எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
வருடம் விரைந்தே போச்சுதப்பா 
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்

ஆண்டுகள் மூன்றென்ன எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும் உங்கள்
அன்பும் நினைவுகளும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்