திதி:07/10/2026
யாழ். வீரவாணி வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம் 5ம் யுனிற் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் புஷ்பராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்
எதிர்வரும் 07-10-2026 புதன்கிழமை
அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.