நன்றி நவிலல்
திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா) வயது 60 பிறப்பு : 27 NOV 1960 - இறப்பு : 24 MAR 2021
திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் 1960 - 2021 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

கடந்த மாதம் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த அமரர் செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்களின் மரண செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், Social Media மூலமாகவும், மலர் வளையங்கள் , அஞ்சலி பிரசுரங்கள் மூலமும் அனுதாபங்களைக் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள் , சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், ஏனைய நலன்விரும்பிகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை மற்றும் வீட்டு கிரியைகள் 23-04-2021  வெள்ளிக்கிழமை  அன்று  காலை அவரது இல்லத்தில் நடைபெறும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்நிகழ்வு நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரமே நடைபெறும் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.