யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தனுஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அருமைக் கணவரே!
என்னையும் என் மகளையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!
வானடைந்து ஒருவருடம் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
ஆதி அந்தமில்லாக் காலவெள்ளம்
ஓடிக்கொண்டே இருக்கட்டும்
பாதிவழியில் உன்னைக்
கூட்டிச்சென்றானே பாவி யமன்
என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீமட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு வேதனையுடன்
தனிமையில் தவித்து மாள்கிறேன்
கட்டிய மனையாள் கலங்கி நிற்க- நீ
கண்காணாத தேசம் சென்றதேனோ? - நீர்
பெற்ற மகளை பாசத்துக்கு ஏங்கி நிற்க- நீ
பாதியில் மகளை மறந்ததேனோ?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உன் பிரிவு
மறக்கமுடியுமோ? எம்மையெல்லாம்
ஆழாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாமல் சென்றுவிட்டாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!