

யாழ். சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு குருந்தடி பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லதுரை சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்த
எம் அன்புத் தெய்வமே!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
மறையாது இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம்
கலங்க வைத்துப் போனதேன்?
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்திக்கிரியை 22-03-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
I am deeply saddened by the loss that you and your family have encountered. My condolences. Vicky family Annaicoddai (Canada)