

யாழ். சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு குருந்தடி பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லதுரை சின்னையா அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பர் செல்லத்துரை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற அப்பையா, நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமதி(பிரியா), பகீரதன்(முகுந்தன்), பாரதி(கிருஷ்னா), பகீரதி(ரதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குலராஜன், வசந்தகுமார், ஶ்ரீதரன், நளாயினி ஆகியோரின் அன்பு மாமானாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், செல்வராஜா, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற Dr. மதனசேகரன், நற்குணசேகரன், தவராணி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, விமலாதேவி, தருமராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குபேரன், குமரன், அமேயா, சிவனியா, மாதங்கி, மாதனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am deeply saddened by the loss that you and your family have encountered. My condolences. Vicky family Annaicoddai (Canada)